(அஸ்லம் எஸ்.மெளலானா) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கரைவாகு மேற்கு நற்பிட்டிமுனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உலக எழுத்தறிவு தின சிறப்பு நிகழ்வு இன்று நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸின் ஆலோசனையின் பேரில் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீமின் வழிகாட்டலில் நூலக வாசகர் வட்டத்தின் ஒத்துழைப்புடன் ஒழுங்கு செய்யப்பட்டு, நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரண்டு சமாதான பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.