களுதாவளை மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை சாதனை.

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வானது மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மட்ட போட்டிகளின் முடிவில் களுதாவளை ம.வி தேசிய பாடசாலை

12 தங்கப்பதக்கம்

05 வெள்ளிப்பதக்கம்

09 வெண்கலப் பதக்கம்

என்று மொத்தமாக 26 நிகழ்வுகளில் வெற்றிபெற்று 95 புள்ளிகளுடன் கிழக்கு மாகாணத்தில் அதிக தங்கப்பதக்கங்களையும்,  அதிக புள்ளிகளை பெற்றுக்கொண்ட பாடசாலையாக சாதித்துள்ளது.

*31 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.*

குறிப்பாக ஆண்கள் பிரிவில் 51 புள்ளிகளையும்,
பெண்கள் பிரிவில் 44 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

இம்முறை 06 புதிய மாகாண சாதனைகள் இம்மாணவர்களால்   படைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வில் முதல் நிலை பாடசாலையாக வருவது குறிப்பிடதக்கது.