மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட மேலதிகஅரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஶ்ரீகாந்த் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (10) திகதி இடம் பெற்றது.
விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள விவசாய செயற்பாடுகள் தொடர்பாகவும், பெரும்போக விவசாயத்திற்கு தேவையான உள்ளீடுகள், நீர்வழங்கள், காப்பீடு, வங்கி கடன் வழங்கள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
2024ம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான கால அட்டவணையை தயாரித்தல் தொடர்பாக நிபுணர்களுடன் இணைந்து பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் வடகிழக்கு பருவ பெயர்ச்சி காலநிலை ஆரம்பிப்பதற்கு முன் விவசாய நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேவையான உள்ளீடுகளையும் பெற்றுத்தருமாறு விவசாயிகள் இதன்போது கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவருபரஞ்ஜினி முகுந்தன், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்கள், கமநல சேவைகள் பிரதி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.