ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு இன்று ( 10) செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்டத்தில் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருடன் முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.
முதலில் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய நீலாவணையில் அவருக்கு பெரிய வரவேற்பளிக்கப்பட்டது.
தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கை தமிழரசுக்கட்சி கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான முன்னாள் தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் .
ஏனைய தாயக செயலணி உறுப்பினர்கள் பொது கட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
அங்கே முருகன் கோயிலில் சிறப்பு பூஜை இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கல்முனை காரைதீவு அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.