நமக்கு அருகாமையிலுள்ள பண்டைக்கால விடயங்களும் நாம் நாளாந்தம் அனுபவித்து வரும் பொருட்கள் தொடர்பாகவும் சாதாரண மக்களுக்கு வரலாறு தெரியாது இருந்து வருவதை அருங்காட்சி மூலம் அறிந்து கொள்ளும் நோக்குடனே ‘எமது காலம்’ என்ற தொணிப் பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் நடாத்தப்படுகின்றது என மன்னார் மாவட்ட சர்வோதய இயக்குனர் திருமதி சசிரேக்கா நகுலேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் மன்னாரில் செப்படம்பர் 4ந் திகதி முதல் 11ந் திகதி வரை காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
‘சேச் வோ கொமன் கிறவ்ன்ட்’ என்ற நிறுவனத்தின் உதவியுடன் மன்னார் மாவட்ட சர்வோதயத்தின் அனுசரணையுடன் இந் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இதில் பழமை வாய்ந்த கண்காட்சிகளுடன் மன்னார் மாவட்டத்திலுள்ள முக்கியமான விடயங்களும் இவ் அருங்காட்சியத்தில் காணப்படுகின்றது.
இவ் அரங்காட்சியை நடாத்துவதன் நோக்கம் நமக்கு அருகாமையிலுள்ள பண்டைக்கால விடயங்களும் நாம் நாளாந்தம் அனுபவித்து வரும் பொருட்கள் தொடர்பாகவும் சாதாரண மக்களுக்கு வரலாறு தெரியாது இருந்து வருகின்றது.
எமது மக்களின் கடந்த காலத்தின் வரலாற்றை நோக்கும் முகமாகவும் இலங்கையின் 70 வருட வரலாற்றை அனுபவிக்கும் ஒரு தருணமாக இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் தொடக்கம் யாவரும் இதை கண்டு களிப்பது மட்டுமல்ல யாவற்றையும் நன்கு அறிந்து செல்லும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு உதாரணமாக தெரிவிக்கும்போது கடித உறைக்கு முத்திரையை ஒட்டி அனுப்புகின்றோம். ஆனால் அந்த முத்திரையைப் பற்றி தெரியாது பலர் காணப்படுகின்றனர்.
அந்த முத்திரைகளில் எவ்வளவு வகையான விதங்கள் இருக்கின்றது அந்த முத்திரைகள் ஊடாக என்ன சொல்லப்படுகின்றது எத்தனை வகையான முத்திரைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது போன்ற செய்திகளை இந்த அருங்காட்சி ஊடாக யாவரும் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடாகவே இது காணப்படுகின்றது.
இந்த அருங்காட்சியானது நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ள யாவற்றுக்கும் அதற்கான விளக்கங்களும் தெளிவுகளும் கண்டு கழித்து செல்வோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் எமது வரலாறுகளையும் இங்கு பதிவு செய்யக்கூடியதாக இருக்கின்றது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறிய பொருளுக்கும் வரலாறு இருக்கின்றது என இங்கு உணர்த்தப்படுகின்றது என மன்னார் மாவட்ட சர்வோதய இயக்குனர் திருமதி சசிரேக்கா நகுலேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.