(வாஸ் கூஞ்ஞ) 07.09.2024
நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியில் இடம்பெற்ற போட்டியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு சிறப்பு விருதுகள் கிடைத்துள்ளன.
உலக சுகாதார நிறுவனத்தினால் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்புத் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதாரத் தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வhனது சனிக்கிழமை (07.09) கொழும்பு மரினோ பீச் ஹொட்டலில் நடைபெற்றது.
நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு சிறப்பு விருதுகள் இந் நிகழ்வில் கிடைக்கப் பெற்றுள்ளன.
அகில இலங்கை ரீதியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்திலிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே இந்த சிறப்பு விருதினை வென்றுள்ளமை குறிப்பிட்டதக்கது.
இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் அலோகா சிங்கா , சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம் ஹனிபா அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான இந்த விருதுகளை பெற்றுக்கொண்டார்.