எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கொழும்பில் நடைபெற்ற கூட்டம் !

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து கொழும்பு 2 ஸ்டுவர்ட் பிளேசில் கூட்டமொன்று நடைபெற்றது. இக் கூட்டம் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் அர்சத் நிசாமுதீன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் ரவுப் ஹசீர்,மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டினைப்பு செயலாளர் மற்றும் பலரும் உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய மேல்மாகாண சபை உறுப்பிணர் அர்சத் நிசாமுத்தீன்

இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் ஸ்டூவர்ட் தொடர் மாடிக் கட்டிடம் உடைந்து பல ஆண்டுகளாக பாழடைந்து காட்சியளிக்கின்றது. இருந்தும் சில ஏழை மக்கள் தமது இருப்பிடத்திற்கு இப் பாழடைந்த அபாய நிலையில் இத் திட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர் இவ் விடயம் சம்பந்தமாக பல அமைச்சர்கள் அரசியல்வாதிகள் பேசியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை . இவ் வீட்டுத் திட்டத்தின் கூட மறைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாச அவர்கள் இப்பிரதேச மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுத்தார். அதன் பிறகு இப்பிரதேச வாழ் மக்களின் காணிகள் சொத்துக்களை வீடமைப்புக்காக அரச உடைமையாக்கப்பட்ட இதுவரை வீடமைப்புத் திட்டங்கள் இங்கு நிர்மாணிக்கப்பட வில்லை.சட்டவிரோத குடியிருப்பு என காணிகளை சுவிகரித்தார்கள். ஆகவே தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஆதரவலிப்பதன் மூலம் கொழும்பு நகரில் வாழும் மக்களது வீட்டுத் திட்டம், பாடசாலை அனுமதிக்கான பாடசாலைகளை அபிவிருத்திகளை செய்ய முடியும்.
முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பிணர் அர்சத் நிஜாமுதீன் அங்கு தெரிவித்தார்