இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 21 திகதி இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் இன்று (03) திகதி முதல் அஞ்சல் திணைக்களத்தின் ஊடாக நாடு பூராகவும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் அஞ்சல் சேவையூடாக கிராமங்கள் தோறும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு, கல்குடா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
கல்குடா தேர்தல் தொகுதியில் 134,104 வாக்காளர்களும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 210,293 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலிற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக இன்று முதல் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.