( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலயத்திலுள்ள அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய கல்லூரியில் 1983 க.பொ. த.சாதாரண தரம் பயின்ற மாணவர்களின் அமைப்பான, கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி சங்கத்தினரால் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய கல்லூரியில் ” ஸ்ரீ இராமகிருஸ்ணா அரங்கு” இன்று (02) திங்கட்கிழமை காலை ஒன்று கூடலின்போது திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர் க.ஜயந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில்
அதன் தலைவர் உறுப்பினர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
அமைப்பின் தலைவர் சுந்தரம் சிவபாலன்,செயலாளர் சிவலிங்கம் கனகரெட்ணம், பொருளாளர் சின்னத்தம்பி மணிமாறன், மற்றும் உறுப்பினர்களுக்கு பாடசாலை சார்பில் நன்றி கூறும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
அதன் போது ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.