எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டிடுவதற்காக பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா. அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.