கல்முனை நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (31) சனிக்கிழமை 10.30 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கஜன் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்று அதிதிகளால் அடிக்கல் நடப்பட்டது.
இந்த ராஜகோபுரத்தை சேதுபதிப்பிள்ளை மனோன்மணி குடும்பம் ஞாபகார்த்தமாக திருமதி சுந்தரலிங்கம் இந்திராதேவி குடும்பத்தினர் உபயமாக அளிக்கின்றனர்.
உபயகாரர் குடும்பத்தினர் திருமதி சுந்தரலிங்கம் இந்திராதேவி, சுந்தரலிங்கம் சுரேஷ், சுந்தரலிங்கம் முகுந்தன் குடும்பத்தினரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உதவி கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பலரும் அடிக்கல் நாட்டினர்.
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட ஆலயத்தில் இதனை ஒட்டிய விசேட பூஜையும் இடம்பெற்றது.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலய பரிபாலன சபையினர் சகல செயல்பாடுகளையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.