(எருவில் துசி) களுவாஞசிகுடியில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துரையாற்றிய முன்னாள் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் மாவட்டத்துக்கு என தேர்தல் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளவருமான சோ.கணேசமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றும் போது தெரிவித்ததாவது..
இந்த அரசு ஊழல் நிறைந்த மக்களின் வாழ்கை சுமையினை அதிகரித்து செயற்படுவதாகவும் உதாரணமாக பருப்பின் இறக்குமதி விலை 150ரூபாவுக்கும் குறைவானது ஆனால் இந்த அரசு 300ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் மேலும் எல்லாப் பொருட்களுக்கும் வரியை அதிகரித்துள்ளதோடு வைத்தியசாலையில் கூட மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்றது அதாவது புற்று நோயாளர்களுக்கு கூட மருந்து இல்லை அதுபோன்று பல்வேறு மேசடிகள் நடைபெற்றுள்ளது குறிப்பாக கொள்ளைக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளார் ரணில் எனவும் தெரிவித்தார்.
எமது கட்சி முஸ்லிம்களுக்கு வாக்குறுதிகள் பல வழங்கியுள்ளதாகவும் ஆளுனர் பதவியை வழங்கவுள்ளதாகவும் அப்பட்டமான பொய்களை பரப்பி வருகின்றனர் இதை மக்கள் நம்ப வேண்டாhம்.
மேலும் தேர்தல் விஞ்னாபனத்தில் தமிழர் பிரட்சிக்னைகளுக்கான தீர்வை முன்வைத்துள்ளதா என கேள்வி எழுப்பிய போது அது தமக்கு சரியாக தெரியாது என்றும் இருந்தும் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அவர் தயார் எனவும் தெரிவித்தார்.
மக்கள் நன்கு அறிந்து பிரதான மூன்று வேட்பாளர் மூவரில் சிறப்பாளரான சஜித்துக்கு வாக்களிக்குமாறும் வேண்டிக்கொன்டார்.