( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் கொடியேற்றம் இன்று(28) புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபையின் தலைவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் எந்திரி வ. கருணைநாதன் முன்னிலையில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் அலங்கார உற்சவ குரு சிவஸ்ரீ க.கு.நகுலேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளை நடத்தி வைத்தார்கள்.
கல்லோயா இந்து பரிபாலன சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடக்கின்ற இந்த பெருவிழாவானது எதிர்வரும் ஆறாம் தேதி வெள்ளிக்கிழமை இரவு பூஜையைத் தொடர்ந்து நகர் வலம் மற்றும் ஏழாம் தேதி தீர்த்தோற்ஷவத்துடன் நிறைவடைய இருக்கின்றது என்று சபையின் பிரதிநிதி கண.இராசரெத்தினம்( கண்ணன் ) தெரிவித்தார்.
தினமும் காலை 8 மணிக்கும் மாலை 5 மணிக்கும் திருவிழா பூஜைகள் ஆரம்பமாகும்.
ஆலய பரிபாலன சபையின் உதவித்தலைவர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி ப.இராஜமோகன் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.