தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் சர்வ மத பெரியார்களின் ஆசியுடன் வெளியீட்டு வைக்கப்பட்டது.
ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் (26) அக்கட்சியின் கொள்கைப் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் பெயரில் இந்தக் கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சமத்துவம், ஒப்புரவு, சட்டத்தின் ஆட்சி, அனைவரையும் ஒருங்கிணைத்தல், ஜனநாயகப் பண்புகள், பொருளாதார ஜனநாயகம், பிரஜைகள் சார்ந்த ஆட்சி முறை, சமூக நீதி, விஞ்ஞான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஆகிய விடயங்களை உள்ளடக்கி இந்த கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளதாக, இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்வையிட இங்கே click பண்ணவும்