குச்சவெளி பள்ளவக்குளம் விவசாய காணிப் பிரச்சினை சம்பந்தமான கலந்துரையாடல்!

திருகோணமலை , குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் திருமலை எம்.பி. அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை, குச்சவெளி பள்ளவக்குளம் விவசாயக் காணிப் பிரச்சினை சம்மந்தமாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சமிந்த ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அண்மையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இக்காணிப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பில் பலநோக்குக் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜஹான், ஜாயா நகர் விவசாய சம்மேளனத் தலைவர் சமீம், உப தலைவர் நிபார், மற்றும் செயலாளர் இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.