காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வரிசையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிலும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை விசேட அதிரடிப்படையினால் சுற்றி வளைக்கப்பட்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 34 வது ஆண்டு நினை வு இன்று 22.8.2024 மாலை 4 மணியளவில் நடைபெற்றது சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாய சுவாமிஆலய மூன்றலில் சித்தாண்டியில் கானாக்கப்பட்ட உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி செயலாளர் உறவுகள் உட்பட கிராம மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் இவ் நினைவில் கலந்து கொண்டனர் நிகழ்வில் நெய் தீபம் ஏற்றி நினைவஞ்சலி அனுஷ்டித்ததோடு நீதியை வேண்டி சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நின் நாள் அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டது