மட்டக்களப்பில் பட்ஸ் யுகே அனுசரனையுடன் நிர்மாணிக்கபட்ட 3 வீடுகள் கையளிப்பு!

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யுகே ( (BUDS UK ) அமைப்பின் இலங்கை கிளையான மட்டக்களப்பை மையமாக கொண்டு இயங்கும் BUDS-BT என்பன இணைந்து நழிவுற்ற மற்றும் விசேட தேவை உடைய மக்களின் நலன் கருதி நிர்மானிக்கப்பட்ட 3 வீடுகளை பயனாளிகளிடம் நேற்று புதன்கிழமை (21) அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன் கையளித்தார்.

இந்த அமைப்பின் திட்டத்தில் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 7 வீடுகள் நிர்மானிக்கபட்டுவரும் நிலையில் முதல்கட்டமாக நிர்மானிக்கப்பட 3 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு பட்ஸ் மட்டக்களப்பு அமைப்பின் தலைவர் எல்.ஆர்.டேவிட் ஏற்பாட்டில் அந்தந்த பிரதேசங்களில் இடம்பெற்றது

இதில் அதிதிகளாக அமைப்பின் தலைவர் வைத்திய கலாநிதி ஹெலன் கங்காதரன். இணைப்பாளர் பிறிற்டே ஜெயகுமார், யூ.தயாபரன், மட்டு கிளை செயலாளர் எஸ்.சசிதரன், மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனையிலும் , உன்னிச்சை நெடியமடுவிலும் , மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்ட 3 வீடுகளையும் சம்பிராய பூர்வமாக திற்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்

இதில் அந்த பிரதேச செயலாளர்கள் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது