தமிழ் பொது வேட்பாளர் ஆதரவு குறித்து நான் தெரிவித்ததாக வெளிவந்த செய்தி பொய்!

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியனன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் நான் தெரிவிக்காததை உண்மைக்கு புறம்பாக திரிவுபடுத்தி பொய்யாக வெளியிடப்பட்டுள்ளது இதனை எச்சரிப்பதாக ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி முதியோர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்;ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா இவ்வாறு தெரிவித்தார்.

நான் ஓய்வு பெற்று தங்கியிருக்கம் நிலையில் என்னை பலர் வந்து சந்தித்துச் செல்கின்றனர் இந்த நிலையில் சில ஊடகவியலாளர்களும் வந்து சந்தித்து சென்றவர்கள் நான்

ஊடகவியலாளர்கள் உட்பட பலர் வந்து சந்திக்கின்றனர் இந்த நிலையில் நான் நா.உறுப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் எதிராகவும் மற்றும் தமிழ் பொது வேட்பாளருக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக தவறாக திரிவுபடுத்தி என்னையும் குழப்பி அவர்களும் குழம்பியுள்ளனர்.

எனவே நான்; அவ்வாறு எதுவும் தெரிவிக்கவில்லை நான் சொல்ல விரும்புவது இது தான் எமது நாட்டில் சுதந்திரம் வேண்டும் எல்லோரும் சுதந்திரமாகவும் புத்தி வேராகவும் எல்லோரும் சமாதானமாகவும் வாழவேண்டும் அதற்காக யார் யாருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமே அவர்களுக்கு அதரவு தெரிவிக்கவும். முடியாதவர்கள் பேசாமல் விடுங்கள் என்றேன் என சொன்னiதை சிலபேர் அதனை திரிவுபடுத்தி முரன்பாடாக பொய் சொல்லியுள்ளனர்.

எனக்கு விருப்பம் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் சமாதானமாகவும் எப்படி வாழவேண்டுமே அப்படி வாழவேண்டும் என்பது எனது விருப்பம் அதனை தவறாக புரிந்து திரிவுபடுத்தி எனக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளனர்.

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும் எனது விருப்பம் அதனை அன்றும் வலியுறுத்தினேன் இன்றும் அதனை வலியுறுத்துகின்றேன் எனவே பொய் வாதந்திகளை பிரச்சாரங்களை நம்பவேண்டாம் நான் சொல்லவும் இல்லை விரும்பவும் இல்லை தமிழ் மக்கள் விருப்பம் அதற்காக பாடுபடவேண்டும் என்பது டினது விருப்பம் அதனை நிறைவேற்ற தான் குருவாக ஆயராக இறைவன் என்னை தோர்ந்து எடுத்துள்ளார்.

நான் ஓய்வு பெற்றாலும் எனது நோக்கம் எல்லோரும் ஒற்றுமையாக வாழவேண்டும் அதனை விடுத்து ஒருவருக்கு ஒருவர் பிரச்சாரம் செய்து பொய்யாக சொல்லி தவறான வழியில் முன்னெடுப்பதை நான் விரும்பவில்லை அதனை எச்சரிக்கின்றேன் எதிர்க்கின்றேன். என்றார்.