கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் சாரணர் மாணவர்களுக்கு சின்னம் சூட்டு விழா.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி  சாரணர் குழுவின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய சாரணர்களின் அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும்  சாரணர்களுக்கான சின்னம் சூட்டு விழா (21)  கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.ஜாபீர்  தலைமையிலும் கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியர் மேஜர். கே. எம். தமீம் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில்  அக்கரைப்பற்று கல்முனை சாரணர்  மாவட்ட ஆணையாளர் எம். ஐ. உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டாதோடு கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று – கல்முனை மாவட் சாரணர் சங்கத் தலைவர் பேராசிரியர்  எஸ். எல். றியாஸ் , கல்முனை கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் எம். எல். எம். முதர்ரிஸ் , எம்.எச்.ஜெய்னுடீன், ஐ.எல்.எம்.இப்ராஹீம் எஸ்.தஸ்தகீர்,, எம்ஏ..ஸலாம் ,எச்.எம்.ஜெமீன் எம்.பீ.எம். ஹஸ்மின்,  எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம் ,கல்முனை கல்வி வலய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்  ஏ.எம்.அன்ஸார், எஸ்.எம்.எம்.றம்ஸான் முன்னாள்  ஜனாதிபதி சாரணர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதமர் விருதுக்கான பாடத்திட்டதிலுள்ள காட்டுவாசியின் தோள்வார் கட்டிழை சாரணர்களுக்கு அணிவிக்கப்பட்டதோடு மேலும் திறமைகாண் சின்னங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது அங்கத்துவ சின்னம் பூர்த்தி செய்த சாரணர்களுக்கான அங்கத்துவ சின்னமும் சூட்டப்பட்டது.
மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய சாரணர்களுக்கு சாரணர் கழுத்தணி அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டமை  குறிப்பிடத்தக்க விடயமாகும்.