வாகன விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை அனுராதபுரம் பிரதான வீதியில் 10ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மொறவெவ பொலி9 தெரிவித்தனர்

குறித்த விபத்து இன்று (20) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

குறித்த விபத்தானது பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறு விபத்துக்குள்ளானவர் பக்மீகம,மொறவெவ பிரதேசத்தைச் சேர்ந்த விபுல ரணசிங்க (வயது – 32) எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளானவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
குறித்த விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.