அடியார்களுக்கு அமுதளித்த அன்பர்களுக்கு அன்புமடல்

கடந்த சனிக்கிழமை இந்துமத எழுச்சியாக இடம்பெற்ற
காரைதீவு – மண்டூர் மாபெரும் பாதயாத்திரையின் போது வழிநெடுகிலும் அமுதளித்த சைவ அன்பர்களுக்கு காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம் தமது மண் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

இம் மாபெரும் பாத யாத்திரையில் சுமார் 4000 அடியார்கள் பக்தி பூர்வமாக பங்கேற்றனர்.

அவர்களுக்கு கல்முனை முருகன் ஆலயம் தொடக்கம் மண்டூர் வரை தாராளமாக பழரசம் தொடக்கம் அமுது வரை வழங்கினார்கள்.

குறிப்பாக காலை ஆகாரத்தை கிட்டங்கி பிள்ளையார் ஆலயத்தில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் கே.செல்வராசா குடும்பத்தினரும் மதிய ஆகாரத்தை பிரபல சட்டத்தரணி நடராசா சிவரஞ்சித் மற்றும் அவரது சகோதரர் ஜீவராஜா (லண்டன்) குடும்பத்தினரும் வழங்கியிருந்தனர்.
அவர்களுக்கு நன்றிமடலும் வழங்கி வைக்கப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேசத்தில் திரு. ரூபசாந்தன் குடும்பத்தினர் நீராகாரம் வழங்கினார்கள். ஸ்பான்ட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் வழங்கினார்கள். அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.