பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியில் பாடவிதான செயற்பாடுகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையில்(களுவாஞ்சிகுடி) பாடவிதான செயற்பாடுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சக மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ் குமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.