எமது நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு குறுகிய காலத்தில் மீட்கப்பட்டு துரித கெதியில் அபிவிருத்தி அடைந்ததனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள சுற்றுலா மையங்கள் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் உல்லாசப் பிரயாணிகளால் நிரம்பி களைகட்டுகின்றது.
நாடு தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாலும் சர்வதேச ரீதியில் இலங்கையைப் பற்றி நல்லபிப்பிராயம் நிகழ்வதாலும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வருகை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது
.
2019 ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் தாக்குதல் அதனைத் தொடர்ந்து உலகையே ஆட்டிப்படைத்த கொவிட் -19 தொற்று காரணமாக உல்லாசப் பியாணிகளின் வருகையில் தளர்வு ஏற்பட்டதனால் உல்லாசப் பிரயாணிகளை மையமாகக் கொண்டு ஹோட்டல்களை நிர்வகித்து வந்த பலர் தமது தொழிலை இழந்து பாரிய பொருளாதார கஷ்டங்களுக்கு உள்ளாகி வந்ததுடன் பல இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பையும் இழந்திருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி கடற்கரை, மார்பிள் பீச், கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்கோணஸ்வரர் ஆலயம் போன்றவற்றிற்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பாசிக்குடா கடற்கரை, புறாத்தீவு ,கோட்டை போன்றவற்றிற்கும்,அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், உல்லை,அறுகம்பே கடற்கரை,குமுண
தேசிய வனப்பகுதிக்குள் அதிகளவில் உல்லாசப் பிரயாணிகள் செல்கின்றனர்.
உலகிலுள்ள கடற்பரப்புகளில் இயற்கையாக அமைந்த
குடா பொத்துவில் அறுகம்பே கடல் பிரதேசத்சில் அமைந்துள்ளதாலும் சர்வதேச கடலலை சறுக்கு விளையாட்டுக்கு பிரபல்யம் பெற்றுள்ளதாலும் இக் கடற்கரை பிரதேசத்தை உல்லாசப் பிரயாணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.