ஆலயங்களில் எமது சமயமும் கலாச்சாரமும் விற்கப்பட்டு கொண்டு வருகிறது வரலட்சுமி விரத நிகழ்வின் போது ஆலய பிரதம குரு அவர்கள் தெரிவிப்பு விரதங்களில் சிறந்து விளங்குகின்ற விரதமாம் வரலட்சுமி விரத நிகழ்வு நேற்றைய தினம் மாலை மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ நீர் முகப்பிள்ளையார் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது இந்த நிகழ்வின் போது ஆலய பிரதம குரு அவர்களால் இந்த விடயத்தினை தெரிவித்து இருந்தார்.
எல்லா ஆலயங்களிலும் வரலட்சுமி விரதமாக இருக்கட்டும் ஏனைய விரதங்களாக இருந்தாலும் நிதியினை அளவிடுகின்ற செயற்பாடு இடம்பெற்று வருகிறது இருந்த போதிலும் வந்தாறுமூலை ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலயத்தில் எந்தவிதமான ஒரு நிதியரவிடும் இல்லாத நிலையில் இந்த விரத பூஜை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் தோறும் இந்த விரதத்தினை அனுஷ்டித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகவே இந்த ஆலயத்தில் எந்தவிதமான கட்டணங்களும் அற விடாத நிலையில் சகல இடங்களிலும் இருந்து அதிக அளவான பக்தர்கள் கலந்து கொள்வது மேலும் சிறப்பினை தருகிறது இந்த விரத பூசை நிகழ்வுகளை வருடம் தோறும் வந்தாறுமூலையை சத்தியநாதன் குடும்பத்தினரால் இந்த பூஜையினை திறம்பட செய்து வருகிறார்கள்.
இந்த பூசை நிகழ்வுக்காக எந்தவிதமான ஒரு கட்டணமும் அறவிரடாத நிலையில் பக்தர்களின் நலன் வேண்டியும் மக்களின் நலன் வேண்டியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் விரதத்தினை அனுஷ்டிக்கின்ற பக்தர்களுக்கு மஞ்சள் காப்புகள் ஆலய குருமாரினால் அனிவிக்கப்படுவதோடு பூசை உபயகாரர்களால் வரலட்சுமி அம்மனுக்குரிய மஞ்சள் விபூதி குங்குமம் மற்றும் சுமங்கலி காப்புகள் வழங்கப்படுவதும் விசேட அம்சமாகும் விரத பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மா. ஜெயம்பலம் குருக்கள் தலைமையில் நடைபெற்றதோடு அவரோடு இணைந்ததான டேகேந்திர வர்மா குழுக்கள் அவர்களும் இணைந்து இந்த பூசை நிகழ்வுகளை வெகு சிறப்பாக நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது