(வாஸ் கூஞ்ஞ) மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த சிந்துஜா என்ற இளம் தாயின் மரணத்துக்க காணமாக கண்டறிந்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என யாழ் வைத்திய கலாநிதி செந்தூரன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிந்துஜா என்ற இளம் தாய் அனுமதிக்கப்படடிருந்த விடுதியில் வைத்தியர் மற்றும் அங்கு கடமையில் இருந்தவர்களின் கவன குறைவால் உயிர் இழந்த சம்பவம் ஒன்று கடந்த 28 ந் திகதி (28.07.2024) இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக ஒட்டு மொத்த வைத்தியர்கள் பற்றி மக்கள் மனதிலுள்ள தவறான கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் குற்றம் இழைத்தவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னைப்படுத்த வேண்டும் என்று யாழ் வைத்திய கலாநிதி செந்தூரன் அவர்கள் மன்னாரில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
செவ்வாய் கிழமை (13) காலை மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்னால் மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நீதிகோரின போராட்டம் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் யாழ் வைத்திய கலாநிதி செந்தூரன் அவர்கள் மறுபக்கம் தனது உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியிருந்தார்.
இது தொடர்பாக யாழ் வைத்திய கலாநிதி செந்தூரன் அவர்கள் தெரிவிக்கையில்
தான் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக வந்து ஒரு அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளேன்.
இதன் நோக்கம் அன்மையில் சிந்துஜா என்ற ஒரு தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தாள்.
இது தொடர்பாக நாங்கள் ஆராய்திருந்த வேளையில் உடனடியாக எங்கள் செயற்பாட்டில் நாங்கள் இறங்கவில்லை.
காரணம் இது தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இது உரிய முறையில் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது திணைக்களம் சார்ந்த விடயமும் ஆகும்.
இது பிராந்திய சுகாதார சேவைகள் இதைத் தொடர்ந்து வட மாகாணம் மற்றும் மத்திய அமைச்சுக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இது ஒருபக்கம் இருக்க எனதும் மற்றும் என்னுடன் இருக்கும் ஏனைய வைத்தியர்களும் இருக்கின்றார்கள் எங்கள் கோரிக்கை என்னவென்றால்
ஒரு நோயாளிக்கு கிடைக்க வேண்டிய உரிமையை குறிப்பிட்ட வைத்திய குழாம் செய்யாத காரணத்தினால் அந்த தாய்க்கு மரணம் எற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டள்ளது.
உண்மையில் இவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இவர்கள் இதைத் தொடர்ந்து நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும்.
இவைகள் நடைபெற்றிருந்தால் நாங்கள் இது தொடர்பாக தலையீடு செய்யாதிருக்கலாம். நீதிமன்றம் தனது கடமையை செய்திருக்கும்.
ஆனால் இந்த செயற்பாட்டை காலம் தாழ்த்தி கொண்டு செல்வதனால் நீதியை மழுங்கடிக்கும் செயலாகவே யாவரும் கண்ணோக்குகின்றனர்.
நான் என் இங்கு வந்தேன் என்பதற்கு முக்கியமான காரணம் ஓரிரு வைத்தியர்கள் செய்கின்ற தவறுகளால் அல்லது பிழைகளால் ஒட்டு மொத்த வைத்திய சமூகத்தையும் அச்சத்துடனும் , கேள்விக் குறியாகவும் பார்க்கப்படுகின்றனர்.
நான் எனது பணியை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றாலும் நாங்களும் தவறு இழைக்கும் வைத்தியர்களின் செயற்பாட்டை வைத்தே எங்களையும் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
தவறு இழைக்கும் வைத்தியர்களுக்கு நாங்களும் உடந்தையாக இருக்கின்றோம் என்ற பழியை கேட்க வேண்டியுள்ளது.
இதனால்தான் நாங்கள் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று இறங்கினோம். உண்மையில் 99 வீதமான வைத்தியர்கள் தங்கள் பணிகளை நன்கு செய்து வருகின்றனர்.
ஆனால் ஓரிரு வைத்தியர்களின் செயற்பாட்டால் ஒட்டு மொத்த வைத்தியர்களுக்கும் ஆபத்து மட்டுமல்ல பொது மக்களுக்கும் பெரும் ஆபத்தாக மாறும் அபாயமும் உண்டு.
இலங்கையை பொறுத்தமட்டில் அரசாங்க வைத்தியசாலை சிறந்தது. ஆனால் மக்கள் மனதில் தவறான எண்ணம் உருவாகுவதால் இவர்கள் அரசாங்க வைத்தியசாலையை நாட அச்சம் கொள்வர்.
இதற்கான விமோசனம் கிடைக்க வேண்டுமென்றால் மக்கள் எதிர்பார்ப்பின்படி குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆகவே வைத்தியர்களுக்கோ அல்லது பொது மக்களுக்கு எதிராகவோ அல்லது எனது தனிப்பட்ட நோக்கம் கொண்டோ நான் இந்த செயற்பாட்டில் இறங்கவில்லை.
ஆகவே விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட யாவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும் என்பதே யாவரினதும் நோக்கமாக இருக்கின்றது இது இடம்பெறும் வரைக்கும் எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள யாழ் வைத்திய கலாநிதி செந்தூரன் இவ்வாறு தெரிவித்தார்.