வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளுக்கும் சஜித்துக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(13) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் சுரேன் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இங்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கின் பிரதிநிதித்துவம் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.