ஏறாவூர் பிரதேசத்தில் அனுர குமார திஸாநாயகவின் தேசிய மக்கள் சக்தி காரியாலயம் திறந்து வைப்பு!

முஸ்லிம் கட்சிகள் சஜித்திற்கும் ரணிலுக்கும் பிரிந்துநின்று ஆதரவளிக்க முன்வந்துள்ளபோதிலும் முஸ்லிம் மக்கள் புதிய யுகம் ஒன்றை நோக்கி புதிய ஆரம்பம் ஒன்றை ஏற்படுத்தவதற்காக அனுரகுமார திசாநாயக்கவின் பக்கம் அணிதிரண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (11.08.2024 காலை) தெரிவித்துள்ளார்.

சஜித் அணியிலும் ரணில் தரப்பிலும் இலஞ்சம் வாதிகள் இணைந்துள்ளதனால் முஸ்லிம் மக்கள் நேர்மையாகச் சிந்தித்து சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஜனாதிபதித் தேர்தல் செயற்பாடுகளுக்கென முதலாவது அலுவகம் திறக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட செயற்பாட்டாளர் எஸ்எச். அபுஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வு பட்டாசு ஆரவாரமின்றி எளிமையாக நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இங்கு மேலும் பேசுகையில் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் சஜித்துக்கு அதரவளி;ப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் அறிவிப்பை பின்தள்ளிப்போட்;டுள்ளார். இந்நிலையில் தலைவர்கள் என்ன முடிவெடுத்தாலும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அநுரகுமார திசாநாயக்கவுக்கு அணிதிரண்டுள்ளனர்.

இதேபோன்றுதான் மொட்டு கட்சி ஆதரவாளர்களின் நிலையும் உள்ளது. மொட்டுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சஜித்துக்கும் ரணிலுக்கும் ஆதரவளிப்பதற்காக பிரிந்துநின்றாலும் பொதுமக்கள் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் வந்துவிட்டனர். இதனால் எமது வெற்றி உறுதியாகிவிட்டது என்றார்.