திருகோணமலை பிரதான கடற்கரையில் திடிரென பல இலட்சக்கணக்கான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.
குறித்த சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் இறந்தவாறு கரையொதுங்ககியதை அவதானிக்க முடிந்தது.
குறித்த கடற்கரையின் சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள நிலப்பரப்பில் சுமார் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நிலப்பரப்பில் இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளதனை காணமுடிந்தது
இவ்வாறு உயிரிழந்த நிலையில் நண்டுகள் கரை ஒதுங்கியமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மக்கள் மத்தியில் இது குறித்து சிறு அச்சம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்ற நிலையில் இவ்வாறு இறந்த நிலையில் நண்டுகள் கரை ஒதுங்கியமையால் குறித்த கடற்கரை அசுத்தப்பட்டு துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் குறித்த கடற்கரையினை துப்புரவு செய்யும் பணியை முன்னெடுக்கும் நடவடிக்கையினை திருகோணமலை நகர சபை செயலாளர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.