செவிப்புலன் வழுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்வு!

செவிப்புலன் வழுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின்
வெள்ளி விழாவானது (2024/08/10 ) இன்று திருகோணமலையில் உள்ள செவிப்புலன் வழுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன அரங்கில் நடைபெற்றது.

வெள்ளி விழாவை முன்னிட்டு கிரிக்கெட் உதைபந்தாட்டம் முதலிய பல விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டு இன்றைய நிகழ்வின் தலைமை விருந்தினரான திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்களால் பரிசில்களை வழங்கி கௌரவிக்கபட்டன.

இந்நிகழ்வின் தலைமை விருந்தினர் உரையினை போது நாடாளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் அவர்கள்,நிகழ்த்தினார் அதன்போது அவர் வெளிநாடுகளில் செவிப்புலன் அற்றோர்கள் எப்படி எல்லாத் துறைகளிலும் தங்களை நிரூபித்து முன்னிலை வகிக்கின்றார்களோ அதே போன்று நமது நாட்டிலும் இவர்களை சகல துறைகளிலும் சாத்திக்க உறுதுணையாக நிற்பேன் என்று கூறினார்.

இந்நிகழ்வினை சிறந்த முறையில் செவிப்புலன் வழுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் காப்பாளர் பாலசுப்ரமணியம், செயளாலர் அன்றனி வியணகே, கனடாவில் உள்ள செவிப்புலன் வழுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் தலைவர் பால நாயகம் உள்ளிட்டோர்களால் சிறப்பான முறையில் ஒருங்கிணைப்பு செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.