எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் “தேசத்திற்காய் நாம் பிரஜை விருது” வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி அல்-மனாா் அறிவியல் கல்லூாியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளா் ஜே.எல்.எம்.ஷாஜஹான் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அதிதிகளாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், கலை, கலாசாரபீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், பேராசிரியர் கலாநிதி இஸ்மாயில், கலாநிதி எ.எ.எம்.நுபைல், சிரேஷ்ட விரிவுரையாளர் எ.எம்.றியாஸ் அகமட், ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் உள்ளிட்ட மட்டக்களப்பு வா்த்தகா் சங்கத்தலைவா் கே.எம்.கலீல், காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளா் மர்சூக் அகமட் லெவ்வை உட்பட புத்திஜீவிகள், ஊர்ப்பிரமுகா்கள், ஊடகவியலாளா் எனப்பலரும் கலந்து கொண்டனா்.
இதன் போது பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள், தேசத்திற்கு பங்காற்றியவா்கள் உள்ளடங்களாக 50 பேருக்கு “தேசத்திற்காய் நாம் எனும் பிரஜை விருது” வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.