தென்கிழக்கு பல்கலைகழக பதில் உப வேந்தராக தொழிநுட்ப பீடாதிபதி யூ. எல் .அப்துல் மஜீட் நியமனம்.

(அஸ்ஹர்  இப்றாஹிம்) தென்கிழக்கு பல்கலைகழக பதில் உப வேந்தராக பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடாதிபதி கலாநிதி யூ எல் அப்துல் மஜீட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக நிரந்தர உபவேந்த நியமிக்கப்படும் வரை இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.