(றாசிக் நபாயிஸ்) நாவிதன்வெளி பிரதேச செயலக மத்திய முகாம் – 02 கிராம சேவகர் பிரிவில் சுமார் 14 வருட காலமாக இயங்கி வரும் நிலைபேறான விவசாய வளங்களின் நிலையம் (சார்க் – SARC) அலுவலகத்திற்கு கணினி உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு சார்க் நிறுவனத்தின் முகாமையாளர் இ. இதய குமாரின் ஒருங்கிணைப்பில் சார்க் அமைப்பின் வளாகத்தில் இன்று (08) அதன் தலைவர் எஸ். புலேந்திரன் தலைமையில் இடம் பெற்றது.
14 வருட காலமாக கொமர்ஷல் வங்கியுடன் இணைந்து இலங்கை மத்திய வங்கியினால் விவசாயிகளுக்கு விஷேடமாக வழங்கப்படுகின்ற கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் இவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை விருத்தி செய்யவும், அலுவலக வேலைகளை இலகுபடுத்தி கணினி மயப்படுத்தி வெற்றிகரமாக நடாத்தி செல்லும் நோக்கிலும் இக்கணினி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ஆர். கஜரூபன், கெளரவ அதிதிகளாக சார்க் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி இ. சந்திரசேகரன், கல்முனை கொமர்ஷல் வங்கியின் கிளை முகாமையாளர் சி. பேபியன், மட்டக்களப்பு மாவட்ட கொமர்ஷல் வங்கியின் பிராந்திய காரியாலய அதிகாரி வீ. சம்பத், கொமர்ஷல் வங்கியின் தலைமைக் காரியாலைய கடன் பிரிவுக்கு பொறுப்பான எஸ். செந்தூரன், ரி. அனோஜ் போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
சிறப்பு அதிதிகளாக மத்திய முகாம் – 02ஆம் பிரிவின் கிராம சேவகர் கே. கெப்ரியல், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜீ. வினிதா ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பெறுமதியான கணினி உபகரணங்களை சார்க் நிறுவனத்தின் தலைவர்
எஸ். புலேந்திரன் அவர்களிடம் இந்நிகழ்வின் பிரதம அதிதி மட்டக்களப்பு மாவட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ஆர். கஜரூபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சார்க் நிறுவனத்தின் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.