சற்று முன் ஆனையிறவில் கோர விபத்து ஒருவர் பலி!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணையிறவு சோதனை சாவடிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (09) காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய காந்தரூபன் கலையரசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விசுவமடுப் பகுதியில் இருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து இராணுவத்தின் சோதனைச் சாவடியில் மோதி அதேசமயம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இளஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்