மிகச் சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய கன்னி ஆடிப்பூரம் !

( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா இன்று ( 7) புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது .
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலய குரு சிவ ஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில்  ஆடிப்பூரத் திருவிழா நடைபெற்றது.

 ஆலய பரிவான சபை தலைவர் கலாநிதி கே.ஜெயசிறில்  தெரிவிக்கையில் அம்மனுக்கு உரிய இந் நன்நாளில் எமது ஆலயத்தில் முதல் தடவையாக ஆடிப்பூரம் அனுஷ்டிக்க பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர். என்று தெரிவித்தார் .
விசேடமாக ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆலய பரிபாலன சபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் ஆடிப்பூரம் பற்றிய சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
இதேவேளை. நாளை (8) வியாழக்கிழமை நாக சதுர்த்தி விசேட பூஜையும் அங்கு இடம் பெற இருக்கின்றது.
அத் தருணம் கொக்கு மந்தாரை நீல காக்கணம்பூ பால் போன்ற நைவேத்தியங்களை கொண்டு வருமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் த.சண்முகநாதன் தெரிவித்தார்.