மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தினுடாக  கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உள்ளீடுகள் வழங்கிவைப்ப்பு.

( எஸ்.எஸ்.அமிர்தகழியான் ) மட்டக்களப்பு மாவட்டத்தில் உலக உணவுத் திட்டத்தினுடாக  கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உள்ளீடுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

மாவட்டத்தில் கோழி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அவற்றை தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதற்குமான உள்ளீடுகள் இதன் போது வழங்கிவைக்கப்பட்டது.

உலக உணவுதிட்டத்தின் வீட்டு தோட்ட முறைமையின் ஊடாக பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பகட்டமாக மூன்று பிரதேச செயலக பிரிவுகளான கொக்கடிச்சோலை , கரடியனாறு மற்றும் வவுணதீவு ஆகிய கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு  வழங்கப்பட்டது.

இத் திட்டத்தினை எனைய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்குவதற்கு முன்மொழிகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன், ரீ. நிர்மலராஜ், மட்டக்களப்பு மாவட்ட  கால்நடை அபிவிருத்தி திணைக்கள பிரதி பணிப்பாளர் எம்.ஏ. ஹாதி, வைத்த்தியர் திருமதி எஸ்.ஆர் அர்ச்சனா,  உலக உணவுத் திட்டத்தின் மாவட்ட செயல உத்தியோகத்தர் எஸ்  தயானந்த், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி லாவன்யா, எம். வாகிசன் என பலர் கலந்து கொண்டனர்.

உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையில் நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு இத்திட்டத்தினால்  வீட்டுத்தோட்ட விவசாயிகள், வீட்டுப் பண்ணையாளர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரமும்  போஷாக்கு மட்டமும் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.