ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்டத்தின் கல்வி சமூக மேம்பாடு, பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை கொண்டு செல்ல மக்களுக்காக என்றும் துணை நிற்பேன் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள திரியாய் பகுதியில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் நாடாளுமன்றம் இன்னும் சில காலங்களில் கலைக்கப்படலாம் எதிர்வரும் 2025ல் ஆவணியுடன் கலைக்கப்பட்டு விடும். நாங்கள் கற்கும் காலங்களில் மின்சாரம் இருக்கவில்லை அப்போது எனது தந்தை யாழ்ப்பாணத்துக்கு கல்வி கற்பதற்காக அனுப்புவதாக இருந்த போதிலும் அங்கு செல்லாமல் இங்கு கற்று முதல் பல்கலைக்கழகம் சென்றேன்.. 2கோடி ரூபாவை அபிவிருத்தி பணிக்காக பெற்றுள்ளேன். திரியாய் மாத்திரம் அல்ல தென்னை மர வாடி தொடக்கம் வெருகல் வரை அபிவிருத்தி பணிகளை செய்து மாவட்டத்தை முன்னுக்கு கொண்டு வருவேன் தன்னாலான சகல உதவிகளும் செய்வதற்கான தயார் நிலையில் உள்ளேன் என்றார்.