எருவில் பொது நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 01.08.2024ந் திகதி எருவில் பொது நூலகத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் மூன்று இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் எருவில் பொது நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்ற போது உரையாற்றிய பா.உ இரா.சாணக்கியன் அவர்கள் புளுட்டுமான் ஓடையில் சந்திரகாந்தன் சந்திரகாந்தி பூபாலபிள்ளை ஏ வீ சீ என பலரின் பெயர்களில் காணி உள்ளதாக. அறிய கூடியதாக உள்ளது என தனதுரையில் தெரிவித்தார்.
நிகழ்வில் பா.உ செயலாளர் மேனன் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வட்டார வேட்பாளர் அ.வசிகரன் மற்றும் கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபை தலைவர்! மா.சுந்தரலிங்கம் வாசகர் வட்ட தலைவர் அதிபர் சா.பரமானந்தம் தமிழ் அரசு கட்சியின் சார்பில் மே.வினோராஜ் திருமதி க.றஞ்சினி கோடைமேடு கிராம அபிவருத்தி சங்க தலைவர் விஜயசுந்தரம் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.