மாமாங்கர் ஆலய திருவிழாவில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை நடாத்தும் “பாரம்பரிய அரங்க திருவிழா – 2024” ஆனது 29.07.2024 – 01.08.2024 வரை பாரம்பரிய அரங்க ஆற்றுகைகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
கிழக்கிலங்கையில் முதற் தடவையாக முல்லை மண்ணின் மகிடிக்கூத்து, கோவலன் கூத்து என்பன மாமாங்கர் ஆலய திருவிழா முற்றத்தில் 01.08.2024 ஆற்றுகை செய்யப்படவுள்ளன. மகிடிக் கூத்தானது மாலை 3 மணி தொடக்கம் ஐந்து மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து கோவலன் கூத்தானது இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
ஈழத்தமிழர்களின் தனித்துவமான கூத்துக்கலை மரபுகளை காண வாரீர்.
எங்கள் கலைகளைக் கொண்டாடுவோம்