(ஹஸ்பர் ஏ.எச்) இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ஏற்பாடு செய்த ஊடக திட்டம் தொடர்பில் மேற்கொண்ட இறுதி நிகழ்வு தொடர்பிலான நிகழ்வொன்றில் வெள்ளவத்தையில் உள்ள தனியார் ஹோட்டலில் (27,28) இரு நாட்கள் இடம் பெற்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் இதில் பங்கேற்றனர் இதன் போது தொடர்ந்தும் இக்குழு வலையமைப்பு ஊடாக எதிர்காலத்தில் செயற்படுவது பற்றியும் கலந்துரையாடப்பட்டன. கடந்த காலங்களில் கருத்து சுதந்திரம், தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் ஊடக தயாரிப்புக்களை மேற்கொண்டவர்கள் இதன் போது சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் குறித்த நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான பயிற்சியினை இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளர் இஸ்பஹான் சரீப்தீன் வழங்கியதுடன் நிகழ்நிலை காப்புச் சட்டம், கருத்து சுதந்திரம் தொடர்பிலான தெளிவுபடுத்தல்களை சட்டத்தரணி சந்தீப கமதிகே வழங்கினார்.