(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட கிண்ணியா அல்-அக்சா தேசிய பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் (30) காலை இடம் பெற்றதாக தெரிய வருகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது…
பாடசாலை வளாகத்தில் குளவி கூடு ஒன்று இருந்ததாகவும் குறித்த குளவி கூடு கலைந்தமையினால் இவ்வாறு மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவ்வாறு குளவி கோட்டுக்கு இலக்கான 21 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் கிண்ணியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் கடந்த சில தினங்களாக பாடசாலை தொழில்நுட்பக் கூடத்திற்கு அருகாமையில் காணப்பட்ட குளவி கூடு ஒன்று கலைந்தமையினால் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.