எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் பவள விழாவினை முன்னிட்டு YUKன் வைத்திய முகாம்.

(எருவில் துசி) மட்/ பட் /எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் கடந்த 08.06. 2024 இல் நடைபவனி நடைபெற்று முடிந்த சந்தர்ப்பத்தில் எதிர்வரும் 08ம் மாதம் பவள விழா தொடர்பான நூல் வெளியீடு இடம்பெற இருக்கின்றது.

எருவில் கிராமத்தில் பல்வேறு சமய, சமூக, கலை கலாச்சார பணிகளை செய்கின்ற கண்ணகி விளையாட்டு கழகம், உதயநிலா கலைக்கழகம், எருவில் இளைஞர்கழகம் என்பன இணைந்து YUK குழுமமாக 27.07. 2024 ஆம் திகதி மாபெரும் வைத்திய முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

வைத்திய முகாமில் கண் சிகிச்சை, பற்சிகிச்சை மற்றும் இரத்த தான நிகழ்வும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பல இளைஞர் யுவதிகள் இரத்த தானம் வழங்கிய மையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு பாடசாலை நிர்வாகம் பூரண ஒத்துழைப்பை வழங்கியதோடு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினர் மேற்படி வைத்திய முகாமினை நடாத்திய மையும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பாடசாலையின் உடைய அதிபர், நலன் விரும்பிகள்,YUK இன் உடைய செயற்பாட்டாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வைத்திய முகாம் திறன்பட நடைபெறுவதற்கு தங்களு டைய ஒத்துழைப்பை வழங்கியிருந்தமையும் காணக் கூடியதாக இருந்தது.

YUKன் இவ்வாறான சமூகப்பணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.