திருமலையில் யானை தாக்கி நபர் ஒருவர் பலி.

(ரவ்பீக் பாயிஸ்)   திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5ஆம் கட்டை கடவான காட்டுப்பகுதியில் யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.  (25) அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் குறித்த பிரதேசத்தில் மாடுகளை மேய்ப்பதற்காக குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றிருந்த வேலை யானை தாக்குதலுக்கு உள்ளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் கே.ஜி நிலந்த இந்துனில் (வயதில்-44) எனவும் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.