(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய நிர்வாகத்தினர் அங்கு இடம்பெற்ற திருப்புகழ் மாநாட்டுக்கு வழங்கிய மகத்தான ஒத்துழைப்பிற்காக அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள் .
கொடியேற்ற தினத்தன்று இந்த விருது திருப்புகழ் மாநாட்டை நடத்திய 3 இந்து அமைப்புகளால் வழங்கப்பட்டது.
திருக்கோவில் சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையிலான குழுவினர் அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.
கொடியேற்ற தினமன்று இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.