வாகனத்துடன் எரியூட்டப்பட்ட சடலம் மீட்பில் இரு சந்தேக நபர்கள் உப்பு வெளி பொலிஸாரால் கைது

வாகனம் ஒன்றுடன் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வனப்பகுதியில் சடலம் ஒன்று 05.07.2024 அன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர். இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன் மதவாசி வனப்பகுதியில் திருகோணமலை அனுராதபுர பிரதான வீதியில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் பயணிக்க கூடிய வனப்பகுதியில் குறித்த சடலம் முற்றாக எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட செல்வநாயகம் புரம் பகுதியை சேர்ந்த ஜெயரூபன் (வயது – 42) எனவும்  அவரின் கேப் ரக வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர். இதனுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக உப்பு வெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் ஏற்கனவே சம்பவம் நடந்து மறு நாள் கைது செய்யப்பட்டதாகவும் இன்று (23)மற்றொரு நபர் கைது செய்யப்பட்டதாகவும் மூன்றாவது சந்தேக நபரை இரண்டாவது சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கைது செய்யவுள்ளதாக உப்பு வெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது
இவ்வாறு காணாமல் போனவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இருந்து காணாமல் போனதாகவும் நபர் ஒருவர் ஜெயரூபன் என்பவரை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றதாகவும் பின்னர் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பினால் அவர் தாக்கப்பட்டதாகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஜெயரூபனின் குடும்பத்தினரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் (வயது-48,வயது – 51 மற்றும் வயது – 24) மூன்று சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட மூவரின் வாக்குமூலத்திற்கு அமைவாக இவ்வாறு வீட்டில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட ஜெயரூபன் தாக்கப்பட்டு பின்னர் பன்குளம் காட்டுப் பகுதியில் இருந்து சுமார் கிலோ மீட்டர் தூரத்தில் வாகனத்தில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டது அடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த மொறவெவ
பொலிசார் குறித்த வாகனம் ஜேரூபன் என்பவருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது
மூன்றாவது சந்தேக நபரை பொலிசார் தேடி வருவதுடன் குறிப்பிட்ட இரு சந்தேக நபர்களின் புகைப்படத்தினை வெளியிட்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.