தென்கைலை உலகசமாதான ஆலயத்தின் கிளையான உலகசமாதான ஆலயம் சுவிட்ஸர்லாந்தின் சார்பாக சூரிச்நகரில் குரு பௌணர்மி தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
உலகசமாதான ஆலயம் சுவிட்ஸர்லாந்தின் தலைவர் வேலுப்பிள்ளை கணேசகுமார் நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன் இந்தியாவிலிருந்து குருமகான் காணொளி வாயிலாக தனது வாழ்த்துக்களைத்தெரிவித்தார். நிகழ்வில் கூட்டுத்தியானம் உலக அமைதிக்காக நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியை சுவிட்ஸர்லாந்தின் மெய்ஞான ஆசிரியர் பா ஜெ பிரகாஸ் தொகுத்து வழங்கினார்.
ஆதியாக விளங்கும் சிவபெருமான் ஏழு முனிவர்களுக்கான ஞான உபதேசம் செய்த நாளான பௌணர்மியே குருபௌணர்மி நாளாக திகழ்கின்றது