கிண்ணியா கடலில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு.

(ரவ்பீக் பாயிஸ்)  கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தோனா கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம்  (18) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது கிண்ணியா அகம்மட்  ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதான மஃரூப் முன்னவ்வரா என்பவரே இவ்வாறு சடலமாக  மீட்கப்பட்டதாக   கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் கடலில் குளிப்பதற்காக இன்று காலை கடலில் இறங்கியதால் கடலில் மூழ்கி இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சடலத்தை நீதவான் விசாரனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை  கிண்ணியா
பொலிசார்  முன்னெடுத்துள்ளனர்.