தமிழ் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளராக மன்னார் அமுதன் சத்தியப் பிரமாணம்.

( வாஸ் கூஞ்ஞ)

சத்தியப்பிரமாண தமிழ் ஆங்கில மொழிப்பெயர்ப்பாளராக மன்னார் சின்னக் கடையை பிற்ப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஜோசப் அமுதன் டானியல் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு முன்னிலையில் செவ்வாய் கிழமை (16) சதத்pயப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

திரு ஜோசப் அமுதன் டானியல் தற்பொழுது மன்னார் மாவட்ட செயலகத்தில் கரையோரம் பேணல் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றார்.

இவர் தமிழ் , ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் நன்கு புலமை உள்ளவர். அத்துடன் இவர் ஆங்கில உயர் தேசிய டிப்ளமோ , கணனி அறிவியலில் இளமானி (பி.எஸ்.சி) பட்டப்பின் பட்டயக் கல்வி  (பிஜிடீசீஏ) சமூகவியலில் முதுமாணி (எம்ஏ) உட்பட 12 பட்டயக் கல்வி நெறிகளை பூர்த்தி செய்துள்ளார்.

சமூக அக்கறையுடன் செயற்பட்டு வரும் இவர் ஒரு அகில இலங்கை சமாதான நீதவானும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டபீட இரண்டாமாண்டு மாணவருமாவார்.

வடமாகாண இளங்கலைஞர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள அமுதன் ‘விட்டுவிடுதலை காண்’ , ‘அக்குரோணி’ ‘அன்னயாவினும்’ மற்றும் ஒற்றையானை ஆகிய நான்கு நூல்களையும் எழுதியுள்ளதுடன் குறும்படம் மற்றும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது