வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள ச.குகதாசன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்டக்கிளை பிரதிநிதிகளால் இன்று 14ம் திகதி மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள கட்சியின் பணிமனையில் இடம் பெற்றது.
இதன் போது மாவட்டக் கிளையை பிரதிநிதித்துவப்படுத்து ம் குச்சவெளி , தம்பலகாமம் மூதுார்,வெருகல் , பட்டனமும் சூழலும் மற்றும் திருகோணமலை ஆகிய கோட்டங்களில் உள்ள மாவட்டக் கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ் வரவேற்பை நிகழ்வை செய்தார்கள்.