கவிப்பேரரசுக்கு அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்

தரணியெல்லாம் தமிழர்கள்  போற்றுகின்ற

தன்மானத்தமிழனே,

தமிழுக்கு  மகுடம் சூட்டிய அரசே ,

கவிப்பேரரசே.

இனிய அகவைத்திருநாள்  வாழ்த்துக்கள்.

வாழ்த்துவதற்கு வயதில்லை, தகுதியில்லை.

வணங்கி வாழ்த்துகிறேன்.

மனிதனை மனிதன் வணங்குவது, மரபில்லை.

முத்தமிழையே வணங்குவது தவறில்லை.

எனது சிந்தையிலே தோன்றிய

சின்ன சின்ன  ஆசைகளை

பந்தியிலே வைக்காமல் உன்,

பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

கள்ளிக்காட்டு இதிகாசத்தையும்

கருவாச்சிக் காவியத்தையும்.

ஆறாவது காப்பியமாக.அரசு

அங்கீகரிக்க       ஆசை

இல்லையெனில்

வாழுகின்ற காப்பியமே!

நீ ஆறாவது  காப்பியத்தை

படைத்துவிட  ஆசை,

அதனை நான் சுவிஸிலே

வெளியிட்டு  வைக்க ஆசை.

வள்ளுவருக்கு கோட்டம் இருப்பதுபோல்,

வைரமுத்துக்கோட்டம் அமைத்திட   ஆசை

அதில் உனது படைப்புக்களை

ஆவணப்படுத்த    ஆசை

இருபதடி  சிலை  வைத்திட  ஆசை,

அதை  நீயே  திறந்துவைக்க  ஆசை,

உனது பவள விழாவை  தமிழர் திருநாளாக

பாரெல்லாம்      பறைசாற்ற   ஆசை,

அவ் விழாவை எல்லோரும்

கொண்டாட  ஆசை.

இவையாவும்  நீ வாழுகின்ற காலத்திலே

நிறைவேற  ஆசை

சின்ன சின்ன ஆசையை சிதறிவிட்டேன்.

எனக்குப் பேராசை உள்ளது பேரரசே.

ஒருவேளை உனக்கு முன்னால் நான் இறந்து விட்டால்

நீ எனக்கு இரங்கற்பா

எழுதிட   ஆசை,

 

வாழ்க  தமிழ்  வாழ்க நின்  தமிழ்த்தொண்டு

கவிக்குமார்

சுவிஸ்

0041 78 920 58 58