ஜேர்மனி சிங்கன் அருள்மிகுசித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. சிங்கன் சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவதர்மசீலர் சிவசிறி இராம சந்திரகாந்த சிவாச்சாரியார் தலைமையில் கடந்த 05.07 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ நிகழ்வு எதிர்வரும் 16ம் திகதிமாலை வைரவமடையுடன் நிறைவுபெறவுள்ளது.
Ravensburg அடியார்களின் உபயத்துடன் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் பக்தர்கள் கற்பூரச்சட்டி, பால்குடம் ஏந்தியதுடன். காவடியும் எடுத்து தங்கள் நேர்த்திகளை தீர்த்தனர்.
இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.